இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! பெற்றோர்களே அவதானம்!

#SriLanka #children #Corona Virus
Yuga
4 years ago
இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! பெற்றோர்களே அவதானம்!

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதாக சுட்டிக்காட்டியுள்ளார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்திய கலாநிதி சமந்த ஆனந்த.

இதுவரை 180 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதேவேளை, சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது தொடர்பாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார்.

குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொரோனா தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா? மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ? உட்காருகின்றனரா ? சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா? சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா? கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா? சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா?

இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4