பிக்குகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட பராக்கிரம சமுத்திர நடைபாதை செயற்றிட்டம்

Prathees
4 years ago
  பிக்குகளின் எதிர்ப்பால்  கைவிடப்பட்ட பராக்கிரம சமுத்திர நடைபாதை செயற்றிட்டம்

சர்ச்சைக்குரிய பராக்கிரம சமுத்திர நடைபாதை செயற்றிட்டத்தை கைவிடுவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக   நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஹால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்

சுமார் 3.5 கோடி ரூபா செலவில் பராக்கிரம சமுத்திரத்தின் கரையுடன் இணைந்ததாக நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

குறித்த திட்டத்திற்கு மகாநாயக்க தேரர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர்.

இதற்கமைய சகல தரப்பினருடன் இணக்கப்பாடு ஏற்படுத்தப்படும் வரையில் குறித்த நிர்மாணப்பணிகள் கைவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த நிர்மாணப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர் மாவட்ட அபிவிருத்தி குழுவின் சகல தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதாகவும் நடைபாதை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட கற்களை அங்கிருந்து அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4