இலங்கையில் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம் ஒரு மீன் இத்தனை இலட்சமா?

#SriLanka #Batticaloa
Yuga
4 years ago
இலங்கையில்  மீனவர்களுக்கு  அடித்த அதிஸ்டம் ஒரு மீன் இத்தனை இலட்சமா?

கல்முனை பிராந்திய கடற்கரையில் கடந்த ஒரு வாரகாலமாக பெரிய மீன்கள் வலையில் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பாரிய சுறாக்கள் மற்றும் திருக்கை போன்ற மீன்கள் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்டு ரூபா 8 இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 12 அடி நீளமான கொப்புறா மீன் ஒன்றும் அப்பகுதி மீனவர்களுக்கு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கொப்பறா மீனின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபா எனவும் இதேவேளை குறித்த மீனவரின் வலையில் சுமார் 50 கிலோ கிராம் எடையுள்ள திருக்கை இன மீன் ஒன்றும் பிடிபட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.தற்போது கல்முனை கடற்கரையில் கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், பிடித்த மீன்களை சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித சிரமமும் இன்றி கடற்தொழில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4