இலங்கை அரசாங்கத்தால் தேடப்படும் அர்ஜுன மஹேந்திரனுக்கு ஓய்வூதியம்??

#SriLanka #government
Yuga
4 years ago
இலங்கை அரசாங்கத்தால் தேடப்படும் அர்ஜுன மஹேந்திரனுக்கு ஓய்வூதியம்??

பிணை முறி மோசடி தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் தேடப்படும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர்களாக பதவி வகித்தவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

வங்கியின் முன்னாள் ஆளுநரான தற்போதைய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஓய்வூதிய கோரிக்கையை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கைக்கு அமையை ஓய்வூதியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன் தற்போது தலைமறைவாக உள்ளதுடன், அவர் சிங்கப்பூரில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4