டெங்கு அச்சுறுத்தல் : கொழும்பு நகரில் கழிவுநீர் அகற்றுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

#SriLanka #Colombo #Dengue #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
டெங்கு அச்சுறுத்தல் : கொழும்பு நகரில் கழிவுநீர் அகற்றுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

டெங்கு நோய் பரவலை கையாள  அரச நிறுவனங்களுக்கு இடையே உள்ள பரஸ்பர தொடர்பை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா வலியுறுத்தியுள்ளார். 

 கொழும்பு நகரின் கழிவு தொடர்பான பிரச்சினை மற்றும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் நேற்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 

 தற்போதுள்ள கழிவு சேகரிக்கும் செயல்முறையை மேலும் முறைப்படுத்தவும், வளங்களை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்தவும்  அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 

அதேபோல், நீண்டகால செயல்பாட்டு வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்டுள்ள வலயங்களில் தற்போது தேங்கிக்கிடக்கும் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

 தற்போதைய கழிவு முகாமைத்துவம் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பிரச்சினைகளுக்கு நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வை வழங்குவதற்காக எடுக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால உத்திகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4