முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பிரதமர் வழங்கிய அனுமதி

#SriLanka #PrimeMinister #three-wheeler
Yuga
4 years ago
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பிரதமர் வழங்கிய அனுமதி

மக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில், முச்சக்கரவண்டிகளை அழகுப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டிகளை அழகுப்படுத்துவது தொடர்பில் சட்டங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், குறித்த வர்த்தமானியில் சில திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4