தெஹிவளை ஓஐசியாக நடித்து சினிமா பாணியில் கொள்ளையிட்ட இருவர் கைது

#Arrest #Police #Colombo
Prathees
4 years ago
தெஹிவளை ஓஐசியாக நடித்து சினிமா பாணியில் கொள்ளையிட்ட இருவர் கைது

தெஹிவளை பொலிஸ் நிலைய ஓஐசியாக நடித்து பல்வேறு நபரகளிடம் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸாரால் இம்மாதம் 2 ஆம் திகதி பெண்ணொருவரும் ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 தெஹிவளையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்து இணையத் தளங்களிலிருந்து பெறப்பட்ட பல்வேறு நபர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பெடுத்து பெண்கள் விற்பனைக்கு உண்டு என்ற போர்வையில் அறைகளுக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களை நிர்வாணப்புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து அதனை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை குறித்த நபர்கள்  கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஆண்  24 வயதான ஹோமாகம பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றும் பெண் 26 வயதுடைய  கிருலப்பனை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை பொலிஸ் நிலைய ஓஐசி தெரிவித்து மிரட்டி பண்ம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் ஓமானிலிருந்து வந்த நபரெர்ருவர் இணையத்திலிருந்து வந்த  தொலைபேசி அழைப்பின் படி 
இந்த அறைக்கு வந்தவுடன் குறித்த பெண்ணும் ஆணும் சேர்ந்து  குறித்த நபரெ பயமுறுத்தி  நிர்வாண வீடியோக்களை  எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக தெரிவித்து அவரிடமிருந்த  தங்க நகையையும் ரூ .50 ஆயிரத்தையும் கொள்ளையடித்துள்ளனர். 
இதனையடுத்து குஙித்த நபர் செய்த முறைப்பாட்டுற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த ஆணையும் பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

இணையத்திலிருந்து பெறப்பட்ட சமூகத்தின் பல்வேறு பிரமுகர்களின் தொலைபேசி எண்களை அழைத்து அவர்களுடன் உரையாடி  நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிறகு பெண்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறி அறைக்கு வந்த பின்னர் குறித்த இருவரும் இணைந்து அவர்களை மிரட்டியுள்ளனர். குறித்த ஆண் தன்னை தெஹிவளை பொலிஸ் நிலைய ஓஐசி என தெரிவித்துள்ளார் என விசாரணையின் மூலம் வெளிவந்துள்ளது.

மேலும் விசாரணையில் மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெட்கம்  காரணமாக முறைப்பாடு செய்ய  முன்வரவிவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4