விஜேதாச ராஜபக்ஷவிற்கு சொந்தமான வீட்டில் 200 இலட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம்!

#SriLanka #corruption #wijayadasa rajapaksha #Bribery #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
விஜேதாச ராஜபக்ஷவிற்கு சொந்தமான வீட்டில் 200 இலட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம்!

முன்னாள் அமைச்சர்விஜேதாச ராஜபக்சவிற்கு சொந்தமான வீட்டில் வைத்து மிகப்பெரிய பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஹரக் கட்டாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தளர்த்துவதற்காக பண பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெறப்பட்ட 1,200 லட்சம் ரூபாயில், 200 லட்சம் ரூபாவை மீண்டும் அவரிடம் கையளிப்பதற்காக, நுகேகொடை, நாவல, விஜயபாகு மாவத்தையில் உள்ள விஜேதாச ராஜபக்சவிற்கு சொந்தமான வீட்டில் வைத்து இந்த பரிமாற்றம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த விடயத்தை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர், சட்டத்தரணி அனுஷா சம்பந்தப்பெரும நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

 உரிய பணப் பரிமாற்றம் இடம்பெற்ற விதம் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த தகவல்கள் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4