இலங்கையில் நேற்றையதினம் 180 கொரோனா மரணங்கள்

#Corona Virus #Covid 19 #Covid Vaccine #Covid Variant #Death #SriLanka
Nila
4 years ago
இலங்கையில் நேற்றையதினம் 180 கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்றைய தினம் மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 465,012 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 386,509 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் தினந்தோறும் 200க்கும் அதிகமான கொரோனா உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஓரிரு நாட்களாக 200க்கும் குறைவான உயிரிழப்புக்களே நடந்து வருகின்றன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4