மியோனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட உலோக பெட்டி

Keerthi
4 years ago
மியோனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட உலோக பெட்டி

பிரான்ஸைச் சேர்ந்த பிரான்கொய்ஸ் மியோன் (Francois Mion) எனும் நபர் தனது வீட்டைப் புதுப்பிக்க எண்ணி அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில்  வீட்டின் கட்டுமானத்திற்கு நடுவே ஒரு உலோக பெட்டி இருந்ததைப் பார்த்த பணியாளர் அதனை மியோனிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பெட்டியைத் திறந்து பார்த்த அவருக்கு குறித்த பெட்டிக்குள் தங்க நாணயங்கள் இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் சில நாட்கள் கடந்த நிலையில் மேலும் ஒரு இடத்தில் ஒரு பைக்குள் இன்னும் சில தங்க நாணயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மொத்தமாக 239 தங்க நாணயங்கள் இப்போது அவரிடம் உள்ள நிலையில் அந் நாணயங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாகவும் அவை

250,000 யூரோக்கள் முதல் 300,000 யூரோக்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இவ் ஏலத்தின் மூலம்  கிடைக்கும் தொகையை வீட்டின் உரிமையாளர்களும், பணியாட்களும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளனர் எனக்கூறப்பட்டடுள்ளது,

பிரான்ஸின்  சட்டப்படி, புதையல்கள்  அனைத்தும் அரசுக்குச் சொந்தமாகும். ஆனால், 2016க்குப் பிறகு வாங்கப்பட்ட நிலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புதையல்களுக்குத்தான் இந்த சட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4