நுகர்ந்தாலே போதை தரும் மது : விலை சுமார் ரூ.70 லட்சம் தான்

Keerthi
4 years ago
நுகர்ந்தாலே போதை தரும்  மது : விலை சுமார் ரூ.70 லட்சம் தான்

நீராவியை சுவைத்தாலே போதை தரும் மதுவகை ஒன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல விமான நிலையத்தில் விற்கப்படுகிறது. ஆனால் அதன் விலையை கேட்டாலே தலை சுற்றி கிறுகிறுப்பு வந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வீடுதோறும் நீராவி பிடிப்பது பிரபலமானது. நீராவி பிடிப்பது கொரோனா பரவுவதில் இருந்து தடுக்காது என சுகாதாரத்துறையும் மருத்துவர்களும் விளக்கியும் கூட தொற்று பரவல் தணியும் வரை பல வீடுகளில் நீராவி பிடிப்பது நின்றபாடில்லை.

ஆனால் நீராவியை சுவைத்தாலே போதை கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா. சிங்கப்பூரில் உள்ள ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில் தான் இந்த ஆச்சரியம் அளிக்கும் மது விற்கப்படுகிறது. இந்திய பணமதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மதுவை அனைவராலும் வாங்க இயலாது. 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. வாங்கும் நபர்களுக்கு மட்டும் சுவைத்து பார்க்க சிறிதளவு வழங்கப்படுகிறது. கொரோனா பேரிடருக்கு பிறகு சர்வதேச விமான சேவைகள் கடுமையாக முடங்கி உள்ள நிலையில், தற்போதும் அந்த மதுபானம் விற்கப்படுகிறதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.ஆனால் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4