39 வருடங்களாக மிக ஆழமான கோமா நிலையில் இருந்த PSG வீரர்:மரணம்

Keerthi
4 years ago
39 வருடங்களாக மிக ஆழமான கோமா நிலையில் இருந்த  PSG வீரர்:மரணம்

PSG அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் Jean-Pierre Adams சாவடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

முழங்காலில் ஏற்பட்ட விபத்து ஒன்றை அடுத்து Jean-Pierre Adams இற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை தோல்வியில் முடிய, அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இச்சம்பவம் 1982 ஆம் ஆண்டு இடம்பெற்றது.

மிக ஆழமான கோமா நிலையில் இருந்த அவர், என்றாவது இயல்புக்குத் திரும்புவார் என காத்திருந்த அவரது குடும்பத்தினருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

இன்று செப்டம்பர் 6 ஆம் திகதி திங்கட்கிழமை அவர் தனது 73 ஆவது வயதில் சாவடைந்துள்ளார். இவருக்கு “La garde noire’’ எனும் பெயரும் உள்ளது.  

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4