C 1.2 கொவிட் வைரஸ் இலங்கைக்குள் பரவும் அபாயம்

#SriLanka #Covid Variant #Covid Vaccine #Tourist
Yuga
4 years ago
C 1.2 கொவிட் வைரஸ் இலங்கைக்குள் பரவும் அபாயம்

தென் ஆபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பரவிவரும் C 1.2 என அழைக்கப்படும் மிக வீரியம் கொண்ட வைரஸ் பிறழ்வானது, இலங்கைக்குள் பரவும் அபாயம் காணப்படுவதாக வைரஸ் தொடர்பான விசேட நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியருமான திஸ்ஸ விதாரண தெரிவிக்கின்றார்.

தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ், தற்போது ஏனைய சில நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

 இதனால், குறித்த வைரஸ் இலங்கைக்குள் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தரும் போது, இரண்டு தடுப்பூசிகளையும் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்களா? தடுப்பூசி பெற்று உரிய காலம் நிறைவடைந்துள்ளனவா? என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

அதேவேளை, 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4