3 நாட்களாக காணாமற்போன 3 வயது சிறுவன் காட்டுக்குள்ளிருந்த நிலையில் மீட்பு (VIDEO)

#Australia
Nila
4 years ago
3 நாட்களாக காணாமற்போன 3 வயது சிறுவன் காட்டுக்குள்ளிருந்த நிலையில் மீட்பு (VIDEO)

வியர்வை சட்டை மற்றும் டயப்பர்களை அணிந்த 3 வயது சிறுவன் திங்கள் கிழமை, கரடுமுரடான ஆஸ்திரேலிய வனப்பகுதியில் காணாமல் போன மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒரு சிற்றோடையில் உட்கார்ந்து தனது கைகளில் தண்ணீரை குடித்துக்கொண்டிருந்தான்.

3 நாட்களாக காணாமற் போன 3 வயது சிறுவன் காட்டுக்குள் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளான்.

கடந்த 3 நாட்களிற்கு முன்னர், சிட்னியின் வடக்கே உள்ள புட்டி கிராமத்திற்கு அருகில் இருந்த வீட்டில் இருந்து சிறுவன் ஒருவன் காணாமல் போனதையடுத்து பெற்றோர் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் தேடிக்கொண்டிருந்தனர்.

அனைவரது தேடுதலிலும் அகப்படாமல் போனதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் பொலிஸ் குழுவினர் திங்கள்கிழமை காலையில் அவரது வீட்டில் இருந்து சுமார் 470 மீட்டர் (1,540 அடி) தூரத்தில் உள்ள காட்டுக்குள் இருந்து ஒரு குளத்தருகில் சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டதாக கூறினர்.

பொலிஸ் தெரிவிக்கையில், அவனை மீட்டபோது அவன் நல்ல நிலையில் இருந்தான், ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் என தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தை, அந்தோணி எல்ஃபாலக், தெரிவிக்கையில், அவன் காட்டுக்குள் சென்றதனால் எறும்புகளால் கடிக்கப்பட்டதாகவும், டயபர் சொறி மற்றும் சிராய்ப்புகளால் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

"அவன் மீண்டும் எமக்கு கிடைத்தது ஒரு அதிசயம்" என்று தந்தை செய்தியாளர்களிடம் கூறினார், அவரும் அவரது மனைவி கெல்லி எல்ஃபாலக்கும் தங்கள் மகனுடன் மீண்டும் இணைந்தனர்.

தாய் தந்தையைக் கண்டதும் அவர்களின் குரலைக் கேட்டதும் சிறுவன் மகிழ்ச்சியில் இருந்தான்.

அவன் காணாமல் போன நாளிலிருந்து காட்டுக்குள்ளேயே இருந்திருக்கின்றான் எனவும், நீரிழப்பு அபாயத்தின் காரணமாக குடிநீரை கண்டுபிடிக்கும் திறன் அவனை குளத்தருகில் போய் தண்ணீர் குடிக்கும் திறமையால் அவன் உயிர்வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது, என்று மீட்புக் குழுவினர் கூறினர். அப்பகுதியில் இரவுநேர வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் (43 டிகிரி பாரன்ஹீட்) ஆக குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4