பிரான்ஸ் பரிஸ் நகரில் பட்டப்பகலில் நகைக்கொள்ளை!

#world_news
பிரான்ஸ் பரிஸ் நகரில் பட்டப்பகலில் நகைக்கொள்ளை!

இன்று பிரான்ஸில் பரிஸ் நகரிலுள்ள நகைக்கடையொன்றில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது சினிமாக்களில் வருவது போன்ற அட்டகாசத்தின் பின் கொள்ளையர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு

Place Vendôme இல் உள்ள நகைக்கடைக்குள் நண்பகல் 12.10 மணி அளவில் திடீரென ஆறு வரையான கொள்ளையர்கள் ஆயுதத்துடன் உள்நுழைந்தனர். பல மில்லியன் பெறுமதியுடைய நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. ஆனால் மிக விரைவாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தப்பி ஓடிய கொள்ளையர்கள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தப்பி ஓடியவர்களில் ஒருவர் மூட்டை நிறைய நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பி ஓடிய கொள்ளையர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். Halles பகுதியூடாக இந்த துரத்தல் தொடர்ந்தது. இரு தரப்பும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்தோடு இரு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட நகைகள் மீட்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, திருடர்களுடனான துரத்தல் சம்பவத்தில் BMW மகிழுந்தில் தப்பி ஓடிய கொள்ளையர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்த காவல்துறை அதிகாரி ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.

இச்சம்பவத்தில் மொத்தமாக இரு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட நகைகளின் மதிப்பு தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. அத்தோடு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4