நான் என்பது உன் கடந்தகாலம்

#Poems
Reha
3 years ago
நான் என்பது உன் கடந்தகாலம்

நீ என் கண்ணீரிலும் மலர்கிறாய்
நான் தான் உன் புன்னகையேத் தேடி
புதைகிறேன்
நீ வந்து போகையில் கவிதையையும்
கூட்டி வருகிறாய்
வராத போது கவிதையை அனுப்பி வைக்கின்றாய்
மரங்கள்  கனிகளை படைத்து மகிழ்வது போலவே
நானும் கவிதைகளை படைக்கின்றேன்
என் கவிதைகள்  உளறல்கள் என தெரியும் உலகிற்கு 
உனக்கு மட்டும் தான் தெரியும்
ஆன்மாவின் மெளன சங்கீதம் என்று 
உன் ஞாபகங்கள்  வெறும் நினைவுகள்
அல்ல
அவை என்னால் கூட எழுத முடியாக்
கவிதைகளே
வாழ்க்கை அடித்து துவைத்து சலவை செய்கையில்
என் இளைய காலத்தை உன்  காதலில்  கண்டு 
ஓய்வெடுக்கிறேன்
உன்னை மறக்கவில்லை என அடிக்கடி
அடித்து சொல்கிறது
கனவுகளும் நினைவுகளும்
கடலில்  மூழ்கியிருந்தாலும் கரையேறி இருப்பேன்
உன்  நினைவிலிருந்து
கரை காண்பது எப்படி
உன்னிடம் பெற்ற அன்பின் மூலமே
இந்த கசங்காத பாசம்
உன் கண்கள் கற்றுத் தந்ததே
இந்த அழியாத கவிதையின் வாசம்
இந்த பேரிடர் வாழ்வில் கூட
ஒற்றை நிமிடத்தை அதிசயமாக்கி தர
உன் நினைவுகளால் மட்டுமே முடியும்
வாழ்வில் எல்லோரும் காதலை கடந்து வருகிறார்கள்
நான் கவிதைகளால் அளந்து வருகிறேன்
இந்த பிறப்பில் நீ என்பது 
என் வேர் மூலம்
நான் என்பது உன் கடந்தகாலம்
சொற்களை பூக்களாக்கினேன்
உனக்கு சூட
நீயோ பூக்களை பாக்களாக்கி தந்தாய்
தமிழுக்கு சூட

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!