பிரபல பாடலாசிரியர் புலமைப்பித்தன் காலமானார் - பிரபாகரன் பற்றிய பிரபல பாடலை எழுதியவர் இவரே.....!

Nila
3 years ago
பிரபல பாடலாசிரியர் புலமைப்பித்தன் காலமானார் - பிரபாகரன் பற்றிய பிரபல பாடலை எழுதியவர் இவரே.....!

அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.பாட்டாளிகளின் பாடலாசிரியர்’ புலவர் புலமைப்பித்தன் காலமானார்..!

எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டராக, அன்புக்கு பாத்திரமாக விளங்கிய புலமைப்பித்தன் அதிமுகவின் அவைத் தலைவராக, தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக பதவி வகித்தவர்.

குடியிருந்த கோயில் திரைப்படத்திற்காக’நான் யார், நீ யார், நாலும் தெரிந்தவர் யார், தாய் யார், மகன் யார், தெரியார்’ என்ற தனது முதல் பாடலை எழுதி கவனம் பெற்றவர். அதன்பிறகு எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் புகழ் பெற்றார். கமல் நடித்த உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் அவர் எழுதிய ‘ புஞ்சை உண்டு, நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை’ என்ற பாடல் பாட்டாளிகளின் குரலாக ஒலித்தது.

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 9.33 மணிக்கு உயிர் பிரிந்தது.

இவரின் படைப்புக்களை பார்வையிட....

இவர் பற்பல பாடல்களை எழுதி சிறந்த விருதுகளை பெற்றிருந்தாலும் ஈழத் தமிழர்கள் மத்தியில் இவரை மறக்க முடியாது.

புலவர் புலமைப்பித்தன் அவர்கள் முள்ளிவாய்க்கால் இரண்டாம் ஆண்டு அஞ்சலியை முன்னிட்டு "என் தம்பி வருவான்" என்ற 7 பாடல்கள் அடங்கிய இசைக் குறுந்தகட்டை தோழர் தா.பா, பழ நெடுமாறன்,தோழர் தியாகு மற்றும் கலைப்புலி தாணு அவர்களின் முன்னிலையில் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

என் தம்பி வருவான் பாடலைக் கேட்க.....

 

என் தம்பி வருவான் தம்பி வருவான்
நம்பி இருங்கள் தோழர்களே..
தடைகள் யாவும் உடைந்து போகும்
தருணம் இதுதான் தோழர்களே!!
ஒரு புலியின் உறுமல் கேட்கிறது-அது
போருக்கு ஆயத்தம் ஆகிறது!!!


நான்கு முடிந்தால் முடிந்தது தானா,
ஐந்து தொடங்காதா?-ஐந்து
தொடங்கும் வேளையில் இந்த
அவனி நடுங்காதா?
ஒன்றரை லட்சம் உயிர்களை
விலையாய் தந்தது எதற்காக?-அந்த
உயிர்களின் விலையாய்
ஈழத் தாயகம் பெறுவோம் அதற்காக..!!!
நான் சொல்வது எல்லாம் சத்தியமே-ஈழச்
சுதந்திரம் நமது லட்சியமே!


கடலுக்குள் இருக்கும் பூகம்பம்
உன் கண்ணுக்கு தெரிகிறதா?-விடுதலை
அடைவர் காலத்தைக் கணிக்க
ஜாதகம் இருக்கிறதா?
பதுங்குவதெல்லாம் பாய்வதர்க்காக
என்பது தெரியாதா?-பதுங்கும் புலிகள்
பாய்கிறபோது கடலும் எரியாதா?-என்
கண்ணும் அவனை பார்க்கிறது-அவன்
காலடி ஓசையை கேட்கிறது...