'பொதுமக்கள் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பேஸ்புக் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்,' :ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

#Australia
Keerthi
4 years ago
'பொதுமக்கள் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பேஸ்புக் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்,' :ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

'பொதுமக்கள் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பேஸ்புக் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்,' என்று ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சிறார் சிறையில் தண்டனை அனுபவித்த டைலான் வோலர் குறித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு ஊடக அமைப்பு செய்தி வெளியிட்டது. இந்த செய்திக்கு முகநூல் பயன்படுத்துபவர்கள் மோசமான கருத்துகளை பதிவு செய்தனர். இதையடுத்து வோலர், 2017ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த கீழ் நீதிமன்றம், 'மக்கள் வெளியிடும் அவதூறு கருத்துகளுக்கு பேஸ்புக் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்,' என்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அது தனது தீர்ப்பில், 'ஊடக நிறுவனங்கள், 3ம் நபர்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் சர்ச்சைக்குரிய செய்திகளுக்கு, அதை வெளியிடும் பதிப்பாளர் என்ற வகையில் பேஸ்புக் நிறுவனமே அதற்கு முழு பொறுப்பாக முடியும். , மக்களின் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அவர்களே பொறுப்பு என கூறி, பேஸ்புக் நிறுவனம் தப்பித்துக் கொள்ள முடியாது,' என்று அதிரடியாக கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4