கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், யுவதியொருவர் மீட்பு

#Ampara #Women #Police
Yuga
4 years ago
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், யுவதியொருவர் மீட்பு

அம்பாறை – தமன – சீனத் தோட்டம் பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், யுவதியொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த யுவதி இன்று (09) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட யுவதி, அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தனது மகள் கடத்தப்பட்டுள்ளதாக பெண்ணொருவர், வென்னப்புவ – கந்தானகெதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் குறிப்பிடப்பட்ட யுவதியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4