இரு தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கும் டெல்ட்டா பரவும் ஆபத்தா?

#Corona Virus #Covid Vaccine #Covid Variant
Yuga
4 years ago
இரு தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கும் டெல்ட்டா பரவும் ஆபத்தா?

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் அதி வீரியம் மிக்க பரவல் தன்மையுடைய டெல்ட்டா வைரஸ் திரிபானது, இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய தன்மை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி ,டெல்ட்டா திரிபானது முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய நிலை உள்ளதாக, சர்வதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அதற்கமைய ,டெல்டா திரிபானது, மனிதர்களின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்துசெல்லக்கூடியது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை , டெல்டா கொரோனா திரிபுக்கு, இவ்வாறாக நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் ,ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களும் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து செயற்படவேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4