சுவிஸ் ஸ்டாட் அப் விருதுகள் விழா, கொவிட் காலத்திலும்.

#world_news
சுவிஸ் ஸ்டாட் அப் விருதுகள் விழா, கொவிட் காலத்திலும்.

ஸ்டாட் அப் விருதுகள் விழாவில் பிளான்டட் புட்ஸ் எனும் மரக்கறி இறைச்சி மற்றும் அதைச்சார்ந்த உணவுககளை இரசயானங்களைப் பயன்படுத்தாது உற்பத்தி செய்யும் நிறுவனம் முதலாம் இடத்தினை தட்டிக்கொண்டது.

குட்டிஸ் எனும் மனித தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் உயிரியல் தொழிநுட்ப நிறுவனம் இரண்டாம் இடத்தினையும் முன்றாம் இடத்தினை 9டி லப்ஸ் எனும் வன்பொருட்களையும் மென்பொருட்களையும் காபன் கலவையில் உற்பத்திசெய்யும்  நிறுவனம் பெற்றுக்கொண்டது.

கடந்த வருடம் கடினமாகதாக இருந்துள்ளது. ஆனால் சுவிஸ் ஸ்டாட்அப் சூழல் வழிமுறை அழுத்தத்திலும், சிறந்த பெறுபேறுகளை கொடுத்துள்ளது. இந்த முதல்100 என்ற கொண்டாட்டம் சகல தொழில் முயற்சியாளர்களையும் இக்கட்டான இந்த சூழலில் முன்னுக்கு கொண்டுவந்துள்ளது என வென்சர் லப் நிறுவனத்தின் நிர்வாக பங்காளி ஜோடி மொனசேர்ரட் கூறியுள்ளார். இந்த நிறுவனமும் சுவிஸ் வென்சர் கிளப்புமே 11வது இந்த விருது விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன் மூலம் 140 தொழில் வாய்ப்புக்களையும் 80மிலியன் சுவிஸ் பிராங்குகளையும் ஈட்டிக்கொடுதுள்ளது. இவை அனைத்து கன்டோன் சூரிச்சில் அமைந்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4