பிரான்ஸில் வீட்டில் வெடிகுண்டு தயாரித்த ஒருவர் காவல்துறையினரால் கைது.

#world_news
பிரான்ஸில் வீட்டில்  வெடிகுண்டு தயாரித்த ஒருவர் காவல்துறையினரால் கைது.

ஓகஸ்ட் 26 ஆம் திகதி 26 வயதுடைய  Rouffach (Haut-Rhin) நகரில் நபர் ஒருவர் வீட்டில் வைத்து வெடிகுண்டுகளை தயாரித்து. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரது வீட்டுக்கு விரைந்து சென்றுள்ளனர். குறித்த நபர் அவரது வீட்டில் வைத்து வெடிகுண்டுகளை தயாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் இருந்து மொத்தம் நான்கு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று செயற்படும் நிலையில் இருந்துள்ளது. யுரேனியம், கதிரியக்க கனிக தூள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை கொண்டு அவர் குறித்த வெடிகுண்டுகளை தயாரித்துள்ளார்.

உடனடியாக கைது செய்யப்பட்ட அவர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் உளநல சிகிச்சைகளுக்காக மனநல மருத்துவரிடம் செல்பவர் எனவும், அவரது வீட்டில் யூத மதத்திற்கு எதிராக சில பொருட்களும் தடயங்களும் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4