எண்ண அலைகளின் சக்தியும் ஆழ்மன ஈடுபாடும்..
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
உலகில் நாம் காணும்அனைத்து பொருள்களும் அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான் இருக்கின்றன..
இந்த உண்மையை அணு விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.
எதை சாதிக்க விரும்புகிறோமோ அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காண தீர்வு வழி முறைகள் ஆழ்மனம் பெற்றுத் தரும்..
ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் அதுவெறும் ஆசையாய் இருப்பதானால் பயன் இல்லை.
அந்த விருப்பமானது நிறைவேற்ற முயற்சி தேவை. சரிமுயற்சி செய்கிறோம். எப்போது சாத்தியப்படும்.
விரும்பியதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் முயற்சியும் சாத்திய மாகிறது.
மின்அலைகள் பரவி சென்று பொருள்களை பாதிப்படைய செய்வது போல நமது எண்ண அலைகளும் பரவி சென்று பொருள்களை பாதிக்கின்றன.
அணைத்து பொருள்களும் அலை வடிவங்களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன. நமது எண்ணங்களும் அலை வடிவில் நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக்கின்றன.
வலிமையான எண்ணங்களின் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை ஏற்படுத்த முடியும்.
ஆழ்மனதை பயன்படுத்த தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள் புரிய அது எப்போதும் தயாராக
இருக்கிறது.
ஆழ்மனதை பயன் படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
மனிதனின் எண்ண அலைகள் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்' கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி போன்ற ஒரு சக்தியைநம் ஆழ் மனதில் ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.
மனப்பாடம் அழுத்தமாக இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை. ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம்.
உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது.
ஆழ் மனசக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம்.
அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட..
தனி மனிதனானாலும் சமூகமானாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக எண்ணுகிற போது அந்த எண்ணங்களின் அடிப்படையில் காரியங்களும் நடைப் பெறத் தொடங்குகின்றன.
மனதில் அன்பு இருந்தால், அன்பு
மிக்க சமுதாயம் உருவாகும்.
எண்ணுதல் முடிதல் வேண்டும்..
நல்ல சிந்தனை வளம் பெற வேண்டும்..
வெற்றி பெற்றிட வேண்டும்..
உலகிற்கு வேதத்தை உணர்த்திட வேண்டும்.
உடல்நலம் காத்திட வேண்டும்.
சிறந்த மருத்துவம் தேர்ந்திட வேண்டும்.
அன்பும் கருணையும் வேண்டும்.
அதற்கு அறிவை அறிந்திடல் வேண்டும்.
கலைகளை கற்றிட வேண்டும்.
நல்ல நட்பினை பெற்றிட வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் பூரண
உடல்நலம், மனவளம் பெற வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும், இயற்கையை பற்றியும் தெளிந்த அறிவை பெற வேண்டும்.
பேறாற்றலான இறைநிலைப் பற்றியும், அதன் இயக்க இரகசியத்தையும் எல்லா மனிதரும் உணர வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன் கடமையை உணர்ந்து சமுதாயத்தோடு இணங்கி உதவி செய்து வாழ வேண்டும்.
தனிமனித அமைதி, குடும்ப அமைதி மூலம் உலக அமைதி பெற வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் சித்தர்கள் வாழ்ந்து வழிகாட்டிய இறவாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ வேண்டும். (வள்ளலார்).
எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ..
எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம்
முறையாக இயங்குகிறதோ..
அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை...