ஜப்பானில் செப்டம்பர் மாதம் இறுதி வரை அவசர நிலை பிரகடனம் நீடிப்பு!

Keerthi
4 years ago
ஜப்பானில் செப்டம்பர் மாதம் இறுதி வரை அவசர நிலை பிரகடனம் நீடிப்பு!

ஜப்பானில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், நடைமுறையிலிருக்கும் அவசர நிலை பிரகடனம் செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றம் 18 இதர பகுதிகளில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் செப்டம்பர் இறுதி வரை நீட்டித்து, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது..

எனினும் தற்போது அமலில் இருக்கும் அவசரநிலையானது, வரும் 12-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் அறிவிக்கப்பட்ட கொரோனா கால ஊரடங்கு படிப்படியாக பல பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து ஜப்பான் பிரதமர் கூறுகையில்,

கொரோனா தொற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது, பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், மக்கள் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4