பணிஸ்  துண்டு தொண்டையில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்

#Death #Covid 19
Prathees
4 years ago
பணிஸ்  துண்டு தொண்டையில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்

கோவிட் தொற்றால் பாதிக்க்பட்ட  இரண்டு குழந்தைகளின் தந்தை பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி  மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றுமுன்தினம் (கடந்த 8 ஆம் திகதி) காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் இது தெரியவந்தது.

காலி மாவட்டத்தில் அங்குளுகஹ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 78 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வயிற்றுப்போக்கு காரணமாக நீராகாரம் மட்டும் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் பணிஸ் சாப்பிடவேண்டுமென்று பணிஸ் துண்டொன்றைச் சாப்பிட்ட பிறகு மயக்கமுற்று விழுந்ததாக தெதரிவிக்கப்படுகுpறது.

இதனையடுத்து குறித்த நபர் பின்னர் கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரணத்திற்குப் பிறகு  செய்யப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

காற்றுப்பாதையில் பணிஸ் துண்டு சிக்கியதால் அடைப்பு ஏற்பட்ட மரணம் சமபவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4