குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!! பெற்றோரின் கவனத்திற்கு!

#SriLanka #Warning #Fever #Dengue #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!! பெற்றோரின் கவனத்திற்கு!

குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் நோயிலிருந்து குணமடைந்த பிறகும் கூட சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் (LRH) குழந்தை நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா, அரிதான சந்தர்ப்பங்களில் டெங்கு மூளை பாதிப்பிற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கடுமையான தசை மற்றும் எலும்பு வலியை ஏற்படுத்தி, இதயத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். 

வழக்கமாக குணமடைய ஏழு முதல் எட்டு நாட்கள் ஆகும் என்றும், சில காலங்கள் கழித்தும்கூட பசி திரும்புதல், சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுதல் போன்ற முன்னேற்றத்தின் அறிகுறிகள் தென்படாமல் போகலாம் எனவும் அவர எச்சரிக்கை விடுத்துள்ளார்த. 

அது ஹீமோஃபேகோசைடிக் லிம்ஃபோஹிஸ்டியோசிஸ் (HLH) எனப்படும் அரிதான நோயெதிர்ப்பு தொடர்பான நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.

கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தொடர்ந்து அகற்றுமாறும், குறிப்பாக மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை கொசுக்கடியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4