கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் அனைத்து பெண்களிடமும் முக்கிய வேண்டுகோள்

Prabha Praneetha
4 years ago
கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் அனைத்து பெண்களிடமும் முக்கிய வேண்டுகோள்

தற்போதைய கொவிட் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் முடியுமானால் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்திக் கொள்வது சிறந்தது என்று மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தப்பத்து தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் நாளுக்கு நாள் வீரியமடைந்து புதிய பிறழ்வுகள் உருவாகின்றமையை கருத்திற்கொண்டு தான் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஒரு வருடத்திற்குள், பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதன் ஊடாக கொவிட் நோய் தொற்று குறித்த புதிய தகவல்களை கண்டறிய முடியும் என்றும் என்று மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தப்பத்து தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4