கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக காணிகளை சுவீகரிக்க திட்டம் - மக்கள் எதிர்ப்பு!

#SriLanka #Kilinochchi #land #Military #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக காணிகளை சுவீகரிக்க திட்டம் - மக்கள் எதிர்ப்பு!

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கப்போவதில்லை என  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார் 

பச்சிலைப்பள்ளி முகாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள 25.73:ஏக்கர் தனியார் காணியினை 4வது மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணிக்காக சுவிகரிப்பதற்காகவும்,   இயக்கச்சி எரிபொருள் நிலையத்துக்கு அருகில் உள்ள 12 ஏக்கர் தனியார் காணியினை சுவீகரிப்பதற்காகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள   பச்சிலை பள்ளி பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன்,  இராணுவ தேவைக்காக இந்த காணிகளை சுவிகரிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். 

 இது தொடர்பில் மேலும் கருத்த வெளியட்ட அவர்,  இது முழுக்க முழுக்க பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள். குறிப்பாக எரிபொருள் நிலையத்துக்கு அருகில் உள்ள காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். தற்சமயம் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. 

ஏற்கனவே இந்த இரு காணிகளும் நில அளவை செய்ய முயற்சித்த போதும் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த காணிகளை இராணுவ தேவைகளுக்கு வழங்க முடியாது. அந்த காணி உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து இருக்கிறார்கள் எனவே அந்த காணிகளை உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4