ஊரடங்கு தொடர்பில் இன்று முடிவு?

#SriLanka #Lockdown #Corona Virus
Reha
4 years ago
ஊரடங்கு தொடர்பில் இன்று முடிவு?

நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொவிட்-19 தடுப்புக்கான செயலணி இன்று கூடவுள்ளது.
இந்த கூட்டத்திலேயே, தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

13ம் திகதியுடன் ஊரடங்கு தளர்த்தப்படுமாக இருந்தால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த வார அறிக்கைகளை ஆராய்ந்து, இன்றைய தினம் ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4