பிரான்ஸானது மூக்கில் தடுப்பூசி ஏற்றும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளது.

#world_news
பிரான்ஸானது மூக்கில் தடுப்பூசி ஏற்றும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளது.

கொரோனா கொடூரத்தினால் உயிர்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற கடப்பாட்டில் உலகம் முழுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள போது, பிரான்ஸ் ஒரு முன்னேற்றகரமான கண்டுபிடிப்பை செய்துள்ளது

கொரோனா தடுப்பூசி கைகளில் போடுவதை விட, மூக்கில் போடுவதால் கொரோனா வைரஸ் தொற்றுவது குறைவாக இருக்கும் என பல்கலைக்கழகம் ஒன்று ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.

L'Inrae ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து l'université de Tour பல்கலைக்கழகமும் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டதுடன், அதற்குரிய காப்புரிமையையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

நாசிக்குள் தடுப்பூசி போடுவதால் கொரோனா வைரஸ் தொற்றினாலும் உடலுக்குள் தொடர்ந்து பரவி பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது முதற்கட்ட ஆராய்ச்சி மாத்திரமே. அத்தோடு இந்த ஆராய்ச்சி இதுவரை மனிதர்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை. மிருகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மட்டுமே வெற்றி அளித்துள்ளது.

இந்த ஆராய்ச்சி தொடருந்தும் முழு மூச்சாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4