இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு சுகாதார அமைச்சின் அறிவிப்பு

#SriLanka #Covid Vaccine
Yuga
4 years ago
இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு சுகாதார அமைச்சின் அறிவிப்பு

நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இளைய சமுதாயத்தினரின் மத்தியில் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் கருவுறுதல் பிரச்சினை ஏற்படும் என்ற சந்தேகம் பரவலாக காணப்படுகின்றமையே இதற்கான காரணமென தெரிவித்துள்ளார்.

ஆனால் உலக நாடுகளில் இது தொடர்பில் எவ்வித ஆராய்ச்சியும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இளைஞர் யுவதிகள் அச்சமின்றி கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4