இலங்கையர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர்? காரணம் என்ன?

#SriLanka #Covid Vaccine
Yuga
4 years ago
இலங்கையர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர்? காரணம் என்ன?

எதிர்காலத்தில் குவைத் நாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குவைத் அரசாங்கம் பைஷர் , மொடர்னா, கொவிஷீல்ட் மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளுக்கு மாத்திரமே ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரான மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.

இது தொடர்பில் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உடனடி தீர்வுக்காக இது நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

இதற்கமைய ஏற்கனவே முழுமையாக தடுப்பூசியை பெற்றிருந்த மற்றும் குவைத்தில் வேலைக்குச் செல்லவுள்ள இலங்கையர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஷர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லவுள்ள இலங்கையர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கைபிடிப்பது மிக முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4