கனடா - ஓக்விலி கார் விபத்தில் சாரதி படுகாயம். பாதை மூடப்பட்டு, சில வீடுகளுக்கும் மின்தடை

#world_news
கனடா - ஓக்விலி கார் விபத்தில் சாரதி படுகாயம். பாதை மூடப்பட்டு, சில வீடுகளுக்கும் மின்தடை

கனடா - ஒக்விலில் இன்று காலை 5மணிக்கு, ஒரு கார் விபத்துக்குள்ளானதில் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹோல்டன் பொலிஸார் இது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விபத்து நடந்ததை தொடர்ந்து மோதல் மீள்கட்டுமான பிரிவிற்கான படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சாரதியை வைத்தியசாலையில் சேர்த்து, சம்பவ இடத்தினை பார்வையிட்டு வருகின்றனர்.

பொலிஸார் ஏனைய சாரதிகளுக்கு இதனால் வாகன நேர தாமதம் ஏற்படும் அல்லது வேற்று பாதைகளை பயன்படுத்துமாறு கூறிவருகின்றனர்.

சாரதியின் காயங்கள் பாரதுாரமானவை ஆனால் உயிராபத்தில்லை.

இந்த கார் விபத்தால் அருகில் இருந்த சில வீடுகளுக்கும் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலதிக தகவல் இது சம்பந்தமாக தெரிவிக்க விரும்புவோர் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
police at 905-825-4747 or Crime Stoppers at 1-800-222-8477.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4