பிரித்தானியாவில் வாழும் இலங்கைச்சிறுமி அவசர உதவி கோருகிறார்...

பிரித்தானியாவில் வாழும் இலங்கைச்சிறுமி அவசர உதவி கோருகிறார்...

பிரித்தானியாவில் வாழும் ஈஷா என்ற நான்குவயது இலங்கைத்தமிழ் சிறுமி அரிய வகை மைலோயிட் லுகேமியா எனப்படும் எலும்புமச்சை புற்றுநோயின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார். இவருக்கு ஆதரவு அளிக்குமாறு அவரது உறவினர்கள் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்னும் மூன்று வாரங்களுக்குள் அவருக்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் வைத்தியர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட தெற்காசிய மக்களிடம் இருந்து ஸ்ரெம் செல் எனப்படும் குருத்தணுவை பெற்று அதை ஈஷாவுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவரின் உயிரை காப்பாற்ற முடியும் என குடும்பத்தினரும் வைத்தியர்களும் கோரி வருகின்றனர். ஈஷாவின் உயிரை காப்பாற்றும் நோக்கில் குடும்பத்தினருடன் இணைந்து தமிழ் வைத்தியர்கள், ஆலயங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பொருத்தமான குருத்தணுவை கண்டறியும் பல நடமாடும் நிகழ்வுகளையும் ஏற்படு செய்துள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4