சிறைச்சாலை அருகே உளவு பார்த்த நபர் கைது

#Prison #Arrest #Colombo
Prathees
4 years ago
சிறைச்சாலை அருகே உளவு பார்த்த நபர் கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் இன்று (13) காலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்கருகில் பேஸ்லைன்  நடைபாதையில் இருந்து அவர் உளவு பார்ப்பது மற்றும் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொள்வதை சிறை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

சிறை ஆயுதப் பிரிவு அதிகாரிகள் குறித்த நபர்  இருந்த அந்த இடத்திற்கு வந்ததும் அவர் பேஸ்லைன் வீதியால் கெம்பல் மைதானத்தை நோக்கி ஓடியுள்ளார்.

அதிகாரிகள் சந்தேக நபரை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிப்பவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு கைதிக்கு போதைப்பொருள் கொடுக்க தான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை சோதனையிட்ட போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் அவரிடம் இருந்த தொலைபேசி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4