சுவிற்சர்லாந்தில் கோவிட் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய சட்டத் திருத்தம்!

#Covid 19
Keerthi
4 years ago
சுவிற்சர்லாந்தில் கோவிட் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய சட்டத் திருத்தம்!

இந்த நோய் நிலைப்பாட்டில் நாம் எம்மை பாதுகாப்பதும் மற்றவர்களைப் பாதுகாப்பதும் என்ற அடிப்படையிலே யோசிக்கும் பொழுது இது நாம் ஒரு ஒருங்கிணைந்த சமூகத்தை காப்பாற்றுவதற்கான ஒரு வகையான வழிமுறை என்றே பார்க்கக்கூடியதாக உள்ளதாக சோஷலிச ஜனநாயக கட்சியினுடைய அரசியல் பிரமுகரும் சமூக ஆர்வலருமான சுதாகரன் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுவிற்சர்லாந்தில் கோவிட் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய சட்டத் திருத்தம் தொடர்பில் வினவுகையில் அதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறாக புதிய கோவிட் சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தஉள்ளமை இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று மனித உரிமைகள் சம்பந்தமாகப் பேசப்படுபவர்கள், அதிகூடிய கவனம் செலுத்துபவர்கள் அது சம்பந்தமாக தங்களுடைய தனிப்பட்ட நடைமுறைகளுக்கு எதிரான ஒரு நிகழ்வாகப் பார்க்கின்றார்கள்.

ஆனால் இது ஒரு பண்டமி என்று சொல்லப்படுகிற நோய் பரப்பு என்ற நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்பொழுது நாம் எம்மை பாதுகாப்பதும் மற்றவர்களைப் பாதுகாப்பதும் என்ற அடிப்படையிலே யோசிக்கும் பொழுது இது நாம் ஒரு ஒருங்கிணைந்த சமூகத்தை காப்பாற்றுவதற்கான ஒரு வகையான வழிமுறை என்றே பார்க்கக்கூடியதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4