சுவிற்சலாந்தில் கொவிட் மரணம் தற்போது குறைந்துள்ளது.

#world_news #Covid 19 #Switzerland
சுவிற்சலாந்தில் கொவிட் மரணம் தற்போது குறைந்துள்ளது.

சுவிற்சலாந்தில் கொவிட் தொற்று காரணமாக செப்டம்பர் 12ம்திகதி 2 பேர் இறந்துள்ளர். இறப்பு எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருந்தாலும் இன்னும் எமக்கு கடந்த இரு தினங்களுக்கான வைத்தியசாலை அனுமதி கிடைக்கவில்லை.

நேற்று செப்டம்பர் 13 முதல் உணவகங்கள், தவறணைகள், நுாதனசாலைகள் அல்லது உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற உள்ளக பொது இடங்களை நீங்கள் அணுகினால் உங்கள் கொவிட் சான்றிதழை காண்பிக்க வேண்டும்.

மேலும் வைத்தியாசலைகளில் அழுத்தம் கொடுக்கும் நான்காவது கொவிட் அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஜனவர் 2022 வரை நீடித்துள்ளது.

ஜுன் 26ம் திகதி முதல் முகக்கவசம் அணிதலுக்கு கட்டாயம் இல்லை. நடனக்கழகங்கள், மற்றும் நீர் பூங்காக்கள் மற்றும் 10000 பேருக்கு மேல் பங்கு கொள்ளும் பெரிய நிகழ்வுகளுக்கு செல்வதாயி கொவிட் தொற்றுக்கான சான்றிதழை காண்பிப்பதன் மூலம் உங்கள் தொற்று நிலைய நிரூபித்தால் போதுமானது.

வீட்டிலிருந்து வேலைசெய்யும் முறை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இறுதியாக இந்த கட்டுப்பாடுகளை மீறிச்செல்வோருக்கு எதிராக அரசாங்கம் 50-200 சுவிஸ் பிராங்குகளை தண்டப்பணமாக அறவிடவிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4