நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு இன்று திறப்பு...

Prabha Praneetha
4 years ago
நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு இன்று திறப்பு...

பேராதனை போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் திறப்பு விழா இடம்பெறும்.

ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ஒன்றரை கோடி ரூபா செலவில் நடமாடும் சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் கண்டி மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு இதுவாகும். இதில் நவீன கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4