இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமனம்

#SriLanka #Ajith Nivat Cabral #Central Bank #Governor
Yuga
4 years ago
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமனம்

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மறுதினம் (15) அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால், ஏற்கனவே சுமார் 9 வருடங்கள், இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்திருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4