தமிழ்நாடு முதலைச்சருடன் தமிழ்த் தேசியப் பேரவையின் தூதுக்குழு சந்திப்பு!

#India #SriLanka #Parliament #Vijay #ChiefMinister
Soruban
1 hour ago
தமிழ்நாடு முதலைச்சருடன் தமிழ்த் தேசியப் பேரவையின் தூதுக்குழு சந்திப்பு!

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், சட்டத்தரணிகள் கனகரட்ணம் சுகாஷ் மற்றும் நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4