இலங்கை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை !

#SriLanka #Student #Covid Vaccine
Yuga
4 years ago
இலங்கை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை !

பாடசாலை மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை மருத்துவநிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை மருத்துவமனை வளாகங்களிற்குள் குழந்தைநல மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கவேண்டும் என அரசமருத்துவ அதிகாரி நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிற்கு தடுப்பூசி வழங்குவது குறித்த அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கருத்தினை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்குவது குறித்தும் எந்த வகுப்பு மாணவர்களிற்கு அதனை வழங்கவேண்டும் என தீர்மானிப்பதற்காகவும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

12 முதல் 18 வயதுடைய மாணவர்களிற்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பி;ல் இந்த குழுவின் பரிந்துரைகள் முக்கியமானதாக காணப்படும், நாள்பட்ட நோய்கள் உள்ள மாணவர்களிற்கு முதலிலும் பின்னர் சாதாரண தர உயர் தர பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களிற்கு அதன் பின்னரும் தடுப்பூசி வழங்கப்படலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4