பிரான்ஸின் கொவிட் தொற்று நிலை குறைவடைகிறது.

#world_news #Covid 19 #France
பிரான்ஸின் கொவிட் தொற்று நிலை குறைவடைகிறது.

பிரான்ஸில் கொரோனா வைரசின் நான்காம் தொற்று அலை, படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் இறப்புநிலவரங்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 2.062 பேருக்கு புதிதாக தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தொற்று அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6.907.133 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் 9.986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 446 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2.103 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 116 பேர் 24 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 86 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 115.618 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 88.862 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4