கனடாவில் கொவிட் தொற்று அதிகரித்துள்ளது.

#world_news
கனடாவில் கொவிட் தொற்று அதிகரித்துள்ளது.

கனடாவில் பிரதமர் தேர்வு இடம்பெற்று வரும் வேளையில், அங்கு கொவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கனடாவில் மே மாதத்தின் பின்னர் , நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 8,792பேர் பாதிக்கப்பட்டதுடன் 40பேர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மே 3ஆம் திகதி 9,076பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு கடந்த 24 மணித்தியாலத்தில் தான் அதிகப்படியான பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதேவேளை கனடாவில் இதுவரை கொரோனாவால் மொத்தமாக 15இலட்சத்து 51ஆயிரத்து 072பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , 27ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 42ஆயிரத்து 021பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 81ஆயிரத்து 813பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4