யாழ்ப்பாணத்தில் குளத்தின் பாதுகாப்பு சுவருக்கு பூசப்படும் வர்ணத்தால் சர்ச்சை!

#Jaffna
Yuga
4 years ago
யாழ்ப்பாணத்தில் குளத்தின் பாதுகாப்பு சுவருக்கு பூசப்படும் வர்ணத்தால் சர்ச்சை!

யாழ்ப்பாணம்- பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில், குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில், பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற குளத்தின் சுற்று கம்பங்களுக்கு, இவ்வாறு பௌத்த கொடியிலுள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

1996 ஆம் ஆண்டு 1.51 (0.6063) ஏக்கராக இருந்த குளத்தின் பரப்பளவு, 2013 ஆண்டு மீள அளக்கப்பட்ட நிலையில் 1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளது.

இத்தகைய நிலையில், குறித்த குளம் தற்போது புனரமைக்கும்போது, குளத்திலிருந்து தூர்வாரப்பட்ட மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும்  முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள்  குறித்து கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த குளத்தின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டிருந்தார்.

இவ்வாறு அவர் பார்வையிட்டு சென்றதன் பின்னர், இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4