பிரான்ஸ் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கான கொவிட் சுகாதார ஒழுங்கு முறைகள்...

#world_news
பிரான்ஸ் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கான கொவிட் சுகாதார ஒழுங்கு முறைகள்...

பிரான்ஸில் உள்ள பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்கியிருக்கையில் விரிவுரைகளில் கலந்து கொள்ள கொவிட் 19 சுகாதார அனுமதி வைத்திருக்க தேவயைில்லை என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பங்குபற்றும் விளையாட்டு வகுப்புகள் ,சிற்றுண்டி சாலைகள் மற்றும் நுாலகங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் இந்த சுகாதார அனுமதி பொதுமக்களும் கலந்து கொள்ளும் கலாச்சார, ஓய்வு, மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் தேவைப்படும். அதே வேளை 50 அல்லது அதற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளுக்கும் அவசியம்.

சுமார் 2.5மிலியன் சுய பரிசோதனை சேவைகள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மாணவர்களுக்கு இலவசமாகும். எதிர்காலத்தில்  ஏற்படும் செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்கும்.

முழுமையான தனிப்பட்ட விரிவுரைகளுக்கு திரும்பும் மாணவர்கள் தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு முகக்கவசம் அணிய வேண்டியிருக்கும் என அமைச்சர் பெட்ரிக் விடால் தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4