ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் மீட்பு

#Death
Prathees
4 years ago
ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் மீட்பு

மகாவெலி ஆற்றில் மிதந்ஃத வந்த  பெண்ணின் சடலம் ஒன்றை இன்று நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி டேலி வீதியை சேர்ந்த ஹெகலின்னாரங்கல  என்ற  84 வயதுடைய பெண்ணே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டிலிருந்த தனது தாய் காணாமல் போயுள்ளதாக நாலப்பிட்ட பொலிஸார் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டவரின் மகள் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் நாவலப்பிட்டி பத்துருபிட்டிய பகுதியில் மகாவெலி ஆற்றின் பெண்ணின் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகளினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாலப்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4