பிரித்தானியர் ஒருவரை ஆள்மாறி கைது செய்த வெளிநாட்டு பொலிஸார்...

#world_news
பிரித்தானியர் ஒருவரை ஆள்மாறி கைது செய்த வெளிநாட்டு பொலிஸார்...

ஹொலந்து நாட்டில் கார் ரேஸ் பார்க்கச் சென்ற பிரித்தானியர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரால் அவரது கண்களைக் கட்டி கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லிவர்பூலைச் சேர்ந்த Mark L (54), கார் ரேஸ் பார்ப்பதற்காக ஹாலந்து நாட்டுக்குச் சென்றுள்ளார்.

கடந்த புதன்கிழமை அவர் ஹொட்டல் ஒன்றிற்கு உணவருந்தச் செல்ல, திடீரென அவரை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த பொலிசார், உணவருந்திக்கொண்டிருந்த Markஇன் கண்களைக் கட்டி, உயர் பாதுகாப்பு கொண்ட சிறை ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

அவரிடம் மூன்று நாட்கள் விசாரணை மேற்கொண்டபிறகு தவறு நடந்துவிட்டதாக தெரிவித்த பொலிசார் அவரை விடுவித்துள்ளனர்.

Mark பார்ப்பதற்கு Matteo Messina Denaro (59) என்ற மாஃபியா கும்பலின் தலைவனைப் போல இருந்ததுதான் பிரச்சினை.மாஃபியா கும்பலின் தலைவனான Denaro என்று நினைத்து ஹாலந்து பொலிசார் Markஐ கைது செய்துவிட்டார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4