பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதியோருக்கு 3வது தடுப்பூசி ஏற்றப்படும்.

#world_news
பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதியோருக்கு 3வது தடுப்பூசி ஏற்றப்படும்.

பிரித்தானியாவில் வரும் கிழமை தொடக்கம் 3வது தடுப்பூசி 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்கள், சுகாதார, சமூக பணியாளர்கள், 16 வயதிற்கு மேற்பட்ட எதிர்ப்பு சகதி குறைந்தவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக்குழு சோதனை முடிவுகளின் படி mRNA தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளித்து முதலாவதாக பைசரும் அல்லது மாறாக மோடர்னா அரைவாசி டோசும் செலுத்த உத்தேசித்துள்ளது.

ஒவ்வாமை உள்ளோர் அஸ்ரா செனிகா தடுப்புசியை பெறமுடியும். ஒரு நபர் 3வது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இரண்டாவது டோஸ் பெற்ற 6 மாதங்களின் பின்பே பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4