மூன்றாவது போட்டியில் வெற்றி பெற தென் ஆப்பிரிக்கா அணிக்கு 121 ஓட்டங்கள் இலக்கு

Prasu
4 years ago
மூன்றாவது போட்டியில் வெற்றி பெற தென் ஆப்பிரிக்கா அணிக்கு 121 ஓட்டங்கள் இலக்கு

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 121 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சாமிக கருணாரத்ன 24 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் போர்டின் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதற்கமைய, 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி தென்னாபிரிக்கா அணி  துடுப்பெடுத்தாட உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4