ஊரடங்கு நீடிக்கப்படுமா? வெளியான புதிய செய்தி

Keerthi
4 years ago
ஊரடங்கு நீடிக்கப்படுமா? வெளியான புதிய செய்தி

நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதை தெரிவித்துள்ளார்.

கடந்த 4 வாரங்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4